கலைஞர் நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத்தொகை: சிறப்பு அதிகாரிகள்!

தமிழகம்

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா இன்று (ஜூலை 1) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடை மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் உயர்கல்வித்துறை செயலாளராக நியமனம்.

மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தக்கர் நியமனம்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனராக விஷூ மகாஜன் நியமனம்

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு அதிகாரியாக கூட்டுறவு சங்க பதிவாளர் சுப்பையனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமனம்.

சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக பிரபாகர் ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநராக எஸ்.பிரபாகர் நியமனம்

செல்வம்

ஓபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *