தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (பிப்ரவரி 1) காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும். தென்மேற்கு வங்ககடலில் திரிகோணமலைக்கு 180 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் இலங்கை, தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 55 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்வம்
சிறுமி வன்கொடுமை: பிரபல சாமியாருக்கு ஆயுள் தண்டனை!