மார்ச் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச் 3) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.
ஈரோட்டில் அதிகபட்சமாக 39.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 5-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்சம் 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃபிளாஷ் : மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
ராஜூ முருகனுக்கு குட்பை சொன்ன எஸ்.ஜே.சூர்யா: அடுத்த ஹீரோ இவர்தான்!