நியாயவிலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, அரிசி இலவசமாகவும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும், பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பொருட்கள் பொதுமக்கள் முன்னிலையில் எடை போடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சரியான அளவு எடை இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதனை சரிசெய்ய ரேஷன் பொருட்கள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு சரியான எடையில் விற்பனை செய்யப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் பாக்கெட் மூலம் விற்பனை செய்யும் பணியானது தொடங்கியுள்ளது.
தொடர்ந்து 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என மாதிரி அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paris Olympics 2024 : இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்… ஸ்வப்னில் குசலே சாதனை!
குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!
தரமான சம்பவம்.. அமைச்சருக்கு வாழ்த்துகள்..