திருவள்ளூர் பிரதாப், கிருஷ்ணகிரி தினேஷ் குமார்… மாவட்ட ஆட்சியர்கள் டிரான்ஸ்பர் லிஸ்ட் இதோ!

Published On:

| By Selvam

தமிழகம் முழுவதும் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று (ஜனவரி 31) உத்தரவிட்டுள்ளார். tamilnadu government transfer ias

வணிகவரித்துறை இணை ஆணையராக பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையராக இன்னசன்ட் திவ்யா, கால்நடைத்துறை பராமரிப்புத்துறை இயக்குனர் கண்ணன், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக லலித் ஆதித்யா நீலம், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) பழனி, தொழிலாளர் நலத்துறை ஆணையராக எஸ்.ஏ.ராமன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனராக பிரபு சங்கர்,

தமிழ்நாடு மின்நிர்வாக முகமை இணை இயக்குனர் மற்றும் இணை தலைமை செயல் அதிகாரியாக ஸ்ருதஞ்சய் நாராயண், பொதுத்துறை இணை செயலாளராக கே.எம். சரயு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் ஆணையராக அனாமிகா நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன், விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான், நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார், தருமபுரி ஆட்சியராக சதீஷ், திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகராஜ், கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார், திருவள்ளூர் ஆட்சியராக பிரதாப், திருப்பத்தூர் ஆட்சியராக மோகன சந்திரன், திருவாரூர் ஆட்சியராக சிவசவுந்தரவள்ளி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும் விரைவில் வரும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். tamilnadu government transfer ias

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share