பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை (ஜனவரி 7) முதல் துவங்குகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று (ஜனவரி 5) அறிவித்திருந்தது.
மேலும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக, இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ஜனவரி 10-ஆம் தேதி வரவு வைக்கப்பட உள்ளது.
இந்தநிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000-க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படுகிறது.
டோக்கனில் இடம்பெற்றுள்ள தேதியில் நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!