அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை!

தமிழகம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று (ஏப்ரல் 17) முதல் ஒன்று முதல்  ஒன்பதாம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் வருகிற (ஏப்ரல்) 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று (ஏப்ரல் 17) முதல் 28ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.

இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர்.

மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தில் இருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

1 முதல் 9ஆம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

கூட்டணி சேரும் கட்சியால் கொள்கை மாறாது: எடப்பாடி பழனிசாமி

செல்போனுக்கு அதிக முக்கியத்துவம்: ராகவா லாரன்ஸ் வேதனை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *