வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (பிப்ரவரி 16) 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களான சனி (பிப்ரவரி 17), ஞாயிறு (பிப்ரவரி 18) மற்றும் முகூர்த்த நாளான திங்கட்கிழமையை (பிப்ரவரி 19) ஒட்டி சென்னையில் இருந்து அதிகளவில் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இதனையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் இருந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணிக்க இன்று 9,679 பயணிகளும், சனிக்கிழமை 5,468 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 8,481 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் முன்பதிவு எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும், அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவில் பேருந்து சேவை இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷேன் நடிக்கும் மெட்ராஸ்காரன்: ஸ்பெஷல் என்ன?
பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணி!