பயணிகளின் கவனத்திற்கு… இனி ஈசியா டிக்கெட் கிடைக்கும்!

தமிழகம்

அரசு பேருந்து முன்பதிவு சேவையில் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோர் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் முன்பதிவு சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜூன் 6) அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது.

இதன்காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும்.

மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி 07.06.2023 முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

எனக்கும் யாஷிகாவுக்கும் காதலா? ரிச்சர்ட் ரிஷி விளக்கம்!

“இன்னும் பேசுங்கள்” : ஆளுநருக்கு முதல்வர் சூடான பதில்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *