தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமையை (நவம்பர் 13) பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) வருகிறது. அதற்கு மறுநாள் திங்கட்கிழமை வேலை நாளாக (நவம்பர் 13) இருப்பதால் வழக்கம்போல பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படும் சூழ்நிலை இருந்தது. இதனால் தீபாவளி முடிந்த உடன் இரவே சொந்த ஊர்களில் இருந்து மக்கள் புறப்படுகின்ற நிலை இருந்தது.
எனவே மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கூடுதலாக ஒருநாள் குடும்பத்துடன் செலவிட தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், இந்த ஆண்டு தீபாவளி எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வடைவார்கள். தீபாவளி நோன்பு 13.11.2023 (திங்கள்) அன்று கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள், மாணவர்கள் சொந்த ஊரிலிருந்து ஞாயிற்றுக் கிழமை இரவே புறப்பட வேண்டி உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூடுதலாக செலவிடும் வகையில் 13.12.2023 (திங்கள்) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்று பல்வேறு தரப்பினரும் மறுநாள் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதுதொடர்பாக ஆலோசனை செய்த தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (நவம்பர் 13) பொது விடுமுறை நாளாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதற்கு பதிலாக வருகின்ற நவம்பர் 18-ம் தேதி பணி நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவிலும் தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 13) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!
இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட முதல்வர் உரை: பின்னணி என்ன?