மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மூன்று கட்டங்களாக ஏற்கனவே போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்காததால் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி 430 சதவிகிதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், 3பி மின்கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்டண நடைமுறைக்கு மாற்றி சிறு குறு நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும்.
சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ஆம் கட்டமாக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறும்போது,
“இன்று ஒரு நாள் முழு அடையாள போராட்டத்தை பெரிய போராட்டமாக மாற்ற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முந்திரி தொழிற்சாலைகளும் செயல்படாது. அனைத்து தொழிலாளர்களும் இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இன்று முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொழிற்சாலைகளில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாம். அப்போது தான் மின்சார பயன்பாடு எவ்வளவு குறைந்துள்ளது என்பது அரசின் கவனத்திற்கு செல்லும்.
நம்முடைய கோரிக்கை நிறைவேற்றப்படும். இந்த போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். இன்று காலை 10 மணிக்கு பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் நடைபெறும் போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!