12 மணி நேர சட்ட மசோதாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தொழிற்சங்கங்களுடன் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் 8 மணி நேர பணியை 12 மணி நேரமாக உயர்த்தி சட்ட மசோதா நிறைவேற்ற செய்யப்பட்டது.
இந்த சட்டம் அறிவிக்கப்பட்ட போது திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த எதிர்ப்பையும் மீறி 12 மணி நேர சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டதால் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து 12 மணி நேர சட்ட மசோதாவிற்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, தொழிற்சங்கங்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெரும் எதிர்ப்புகள் நிலவி வருவதால் வரும் 24 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’2023 ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண். 8 / 2023)’ தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்து தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி,
இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும்,
சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் இருவரும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால்,
ஏப்ரல் 24 ஆம் தேதி மதியம் 3 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர்,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர்,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
12 மணிநேர வேலை: மோடியை விட மோசமான ஸ்டாலின்-தாக்கும் சிஐடியு
இளங்கோவன் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றத்தில் மனு!
Comments are closed.