தமிழ்நாட்டில் 1.50 இலட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி தமிழ்நாட்டில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பொது இடங்களில் சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5,501 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை முதலே கோவில்களில் பக்தர்கள் குவிந்த நிலையில்  விநாயகருக்கு வழிபாடு நடத்தி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புலிய குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்த கேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதனால் பாதுகாப்பான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச் சென்று தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து விநாயகர் சிலைகளை வழிபட்டு வருகின்றனர்.

இந்த சிலைகள் ஒரு வார வழிபாட்டுக்கு பிறகு, வரும் 24-ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

மகளிர் சமூகத்தின் பொற்காலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *