பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 9) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கோட்டம் வாரியாக பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் வழக்கமாக 2,025 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 2,098 பேருந்துகள் அதாவது, 103.60 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து மாவட்டங்களிலும் அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகள் 100 சதவிகிதம் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் கோட்டம்
993 பேருந்துகள், 76.50 சதவிகிதம்
சேலம்
387 பேருந்துகள், 96.99 சதவிகிதம்
கோயம்புத்தூர்
1,163 பேருந்துகள், 95.48 சதவிகிதம்
கும்பகோணம்
1,599 பேருந்துகள், 82.98 சதவிகிதம்
மதுரை
1,430 பேருந்துகள், 97.41 சதவிகிதம்
திருநெல்வேலி
1,107 பேருந்துகள், 92.96 சதவிகிதம்
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரை மாட்டுத்தாவணி: எந்த வசதியும் இல்லாமல் கட்டணம் மட்டும் வசூல்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி!
தமிழகத்தில் போக்குவரத்து சேவையில் பாதிப்பில்லை: அமைச்சர் சிவசங்கர்