தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது.
இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.
மேலும் கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையையொட்டி பாதுகாப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், சென்னை, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
4 மாவட்டங்களில் இரவு வரை கனமழை நீடிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!