தமிழகத்தில் நாளை வெளுக்கப்போகும் கன மழை!

Published On:

| By Selvam

தமிழகத்தில் நாளை (டிசம்பர் 26) 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ச்சியாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது.

அதன்படி இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் தெற்கு கேரள கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

செல்வம்

கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீன் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி!

நாட்டு மக்களுக்கு வாழ்த்து-பிரதமர் மோடி