நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவருக்கு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிரிழந்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் இல்லத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவிற்கு அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது நல்லதா?