தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராகத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சிக் கழகம் 1946 ஆம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்திற்காக அவர் இந்த கழகத்தைத் தோற்றுவித்தார்.
இந்த நிறுவனத்தின் தலைவர்களாக எழுத்தாளர் பெரியசாமித்தூரன், முன்னாள் மத்திய உணவுத்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியம், பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, பொன்ன வைக்கோ ஆகியோர் இருந்துள்ளனர்.
எழுத்தாளர் பெரியசாமித்தூரன் தலைவராக இருந்த காலத்தில்தான், தமிழ் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளும், குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளும் வெளியிடப்பட்டன.
இதுமட்டுமல்லாமல் மருத்துவக் களஞ்சியம் – 13 தொகுதிகள், சித்த மருத்துவக் களஞ்சியம் – 7 தொகுதிகள், அறிவியல் தொழில் நுட்பக் களஞ்சியம் – 5 தொகுதிகள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் இதுவரை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி, இந்த கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தின் புதிய தலைவராகத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”சீமான் கருத்தை மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” : தவெக நிர்வாகி பதில்!
இணைய அச்சுறுத்தல் ‘எதிரிகள்’ பட்டியலில் இந்தியா!
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அன்ஷிதா!