இன்று (பிப்ரவரி 27) தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். நாளை (பிப்ரவரி 28) தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்,” என தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.
தென் தமிழக உள் மாவட்டங்கள்: சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி.
தென் தமிழக மாவட்டங்கள் : ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.
வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுகவில் இணையும் 2 பாஜக எம்.எல்.ஏ-கள்? – ட்விஸ்ட் வைத்த அதிமுக எம்.எல்.ஏ
வாசனை விமர்சிக்க வேண்டாம் -அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு!