தமிழக அரசு உலக சாதனை: 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடவு!

தமிழகம்

உலக சாதனை முயற்சியாக தமிழக அரசு சார்பில் திண்டுக்கல்லில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.  

தமிழக முதலமைச்சரின் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பசுமை வனப்பரப்பை 28 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை ஊராட்சியில்  ஆக்கிரமப்பில் இருந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அதிலிருந்த சீமை கருவேல முட்கள் மூன்று மாத காலமாக அகற்றப்பட்டு வந்தது.

அந்த இடத்தில் உலக சாதனை முயற்சியாக ஆறு மணி நேரத்தில் 6500 இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை கொண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் நட  முடிவு செய்யப்பட்டது.

Tamil Nadu World Record Planting 6 lakh saplings in 6 hours

இந்த பசுமை வனத்திற்கு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் மதுரை, திண்டுக்கல் ,திருச்சி சேலம்,

கடலூர், கோவை, தர்மபுரி கிருஷ்ணகிரி தேனி சிவகங்கை ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் 43 வகையான மரக்கன்றுகள் இறக்குமதி செய்யப்பட்டன.

அதுமட்டுமின்றி ஒரு ஏக்கர் பரப்பளவில் பழ மரங்களும், ஆக்சிஜனை அதிக அளவில் வெளியேற்றும் மரங்களும்,

மருத்துவ குணம் கொண்ட விலை உயர்ந்த மரங்கள், மற்றும் பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள்,

நிழல் தரும் பசுமையான மரங்கள் உள்ளிட்ட ஏராளமான உயர் ரக மரக்கன்றுகளும், விலை உயர்ந்த மரங்களான தேக்கு, சந்தனம், செம்மரம், ரோஸ்வுட், உள்ளிட்ட மரங்களும் நட திட்டமிடப்பட்டது.

இன்று (23ஆம் தேதி) மரக்கன்று நடும் உலக சாதனை நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார்.

அவரைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி உள்ளிட்டோரும் மரக்கன்றுகளை நட்டனர்.

Tamil Nadu World Record Planting 6 lakh saplings in 6 hours

இந்த பசுமை வனத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சிறுவர் பூங்கா, மற்றும் மூலிகை மரங்களைக் கொண்ட மூலிகை பூங்கா, மரகத பூங்கா,மற்றும் பறவைகள் சரணாலயம், பண்ணை குட்டைகள் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன.

கலை.ரா

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லாதது ஏன்?: சசிகலா

கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *