தென் மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று (பிப்ரவரி 28 ) நாளை ( மார்ச் 1 ) மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (பிப்ரவரி 28 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் , மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
மு.வா.ஜெகதீஸ் குமார்