தமிழகத்தில் அடுத்த (ஆகஸ்ட் 15-18) மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை மற்றும் லேசான மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 16) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேற்குத் திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருக்கும் சென்னை வானிலை மையம், நாளை (ஆகஸ்ட் 16) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 17ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், ஆகஸ்ட் 18ம் தேதி நீலகிரி, கோவை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதை அடுத்து, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? அன்பில் மகேஷ் விளக்கம்