தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.41 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.40 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.45 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.39 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
23-ஆம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.51 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.50 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.52 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.55 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 464.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையான இன்றும் தமிழகம் முழுவதும் மது விற்பனையாவதால், மது விற்பனையானது ரூ.600 கோடிக்கும் மேல் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
தங்கலான் : கோலார் தங்கவயல் அடிமைகளின் கதையா?
“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சட்டப்படி சந்திப்போம்” – குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் பேட்டி!