36 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்!

தமிழகம்

தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்கள் இன்று (ஜூலை 4) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக காரணங்களுக்காக 36 மாவட்ட பதிவாளர்களை இடமாற்றம் செய்து பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சென்னை தி.நகர் பதிவாளர் செந்தில் நாதன் தஞ்சாவூர் மாவட்ட பதிவாளராகவும், கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர் ஜெயப்பிரகாஷ் பழனி பதிவாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் சிவலிங்கம் பாளையங்கோட்டை பதிவாளராகவும், திருப்பூர் மாவட்ட பதிவாளர் பூபதி பெரியகுளம் பதிவாளராகவும், உறையூர் பதிவாளர் உமாதேவி செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செல்வம்

முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? ஹெல்த் ரிப்போர்ட்!

செந்தில்பாலாஜி வழக்கு: ’ஆள விடுங்கோ’ – துரைமுருகன் எஸ்கேப்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0