தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. 2017ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை தொடங்கப்பட்டன.
இந்த ஆணையம் தலைவர், உறுப்பினர்கள், சட்ட அதிகாரி உள்ளிட்டோருடன் இயங்கி வருகிறது.
இதில் வழக்கறிஞர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் மனோகர் ஆகியோரின் பதவி காலம் முறையே 10.02.2024 மற்றும். 03.03.2024 ஆகிய தேதிகளில் நிறைவடைந்தது.
இவர்களது பதவி காலம் முடிந்ததால் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வு குழு கடந்த ஜூலை 4 ஆம் தேதி இருவரது பெயரை பரிந்துரைத்தது.
அதன்படி எல்.சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ் மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா