தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி கம்பம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளர் சாதிக் அலி என்பவரது வீட்டிலும்,
பழனி நேதாஜி நகரில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக இருந்த கைசர் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரி பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா- பகுதி 9
அமைச்சர் பொன்முடி கார் விபத்து: தொழிலாளி படுகாயம்!