தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024 ஆம் நாள். திங்கட்கிழமை காலை 10.00 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும்.
அப்போது தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள். காலை 10.00 மணிக்குப் பேரவைக்கு அளிக்கப்படும்.
2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 20 ஆம் நாள். செவ்வாய்க்கிழமை அன்றும்,
2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 21 ஆம் நாள். புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்” என்று பேரவையின் முதன்மை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் போது சர்ச்சை ஏற்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, ‘சட்டப்பேரவை தலைவராலோ, அரசாலோ எந்த பிரச்சினையும் வரவில்லை. இந்த ஆண்டு எந்த பிரச்சினையும் வராது” என கூறினார் அப்பாவு.
“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றம் சட்டப்பேரவையையோ, சட்டப்பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது.
சட்டப்பேரவைக்குள் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்ற முழு உரிமையும் சபாநாயகருக்குத்தான் இருக்கிறது. இதை முன்னாள் சபாநாயகர் தனபாலும் சொல்லியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”சாதியற்றவர் சான்றிதழ் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும்” : உயர்நீதிமன்றம்!