தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 12ஆம் தேதி இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் சபாநாயகர் அப்பாவு இன்று (ஜூன் 7) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான பொது விவாதம் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முடிவுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆனால், மானிய கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் நடைபெறவில்லை.
இந்நிலையில், ஜூன் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.
ஜூன் 24ஆம் தேதி முதல் எத்தனை நாட்கள் மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும், எந்ததெந்த தேதியில் எந்தெந்த மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என்பவை பற்றி வருகிற 24ஆம் தேதிக்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.
ஜூன் 24ஆம் தேதிக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முன்னதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்படும்” என அப்பாவு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் தமிழ்நாடு சட்டமன்றம் முதன்முறையாக கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு : ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு!
நீட் தேர்வு முறைகேடு… மாணவர்களை புறக்கணிக்கும் பாஜக அரசு : பிரியங்கா காந்தி சாடல்!