2021-2022ம் ஆண்டில் நாடு முழுவதும் யானைகள் வேட்டையாடி கொல்லப்பட்டதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
குறிப்பாக ரயிலில் அடிபட்டு, மின்வேலியில் சிக்கி, வேட்டையாடுதல் மற்றும் விஷம் தாக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே,
நடப்பு ஆண்டில் ரயிலில் அடிபட்டு தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 15 யானைகள் உயிரிழந்து உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 3 யானைகள் உயிரிழந்து இருக்கிறது.
இதேபோல், மின்சாரம் தாக்கி தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் 57 யானைகள் உயிரிழந்து உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 5 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
வேட்டையாடுதல் காரணமாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் 4 யானைகள் உயிரிழந்து இருக்கின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 3 யானைகள் உயிரிழந்து உள்ளன. மீதமுள்ள 1 யானை ஒடிசா மாநிலத்தில் வேட்டையாடப்பட்டுள்ளது.
விஷம் தாக்கி தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 6 யானைகள் உயிரிழந்து உள்ளது. இதில் தமிழகத்தில் எந்த ஒரு யானையும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு, மின்சாரம் தாக்கி, வேட்டையாடி, விஷம் வைத்து 82 யானைகள் உயிரிழந்து உள்ளதாகவும், இதில் தமிழகத்தில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கலை.ரா
முன்னாள் அமைச்சர் கார் மீது தாக்குதல்: சினிமா பாணியில் வேட்பாளர் கடத்தல்!
விஜய் சேதுபதி வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!