தமிழகம் முழுவதும் நேற்று (ஜனவரி 30) 41 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக டி.ரவிச்சந்திரன், விருதுநகர் ஆட்சியராக வி.பி.ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் ஆட்சியராக சி.பழனி,
கன்னியாகுமரி ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், செங்கல்பட்டு ஆட்சியராக ஆர்.வி.ஷஜீவனா, கோவை ஆட்சியராக கிராந்தி குமார் பாட்டி,
திருவாரூர் ஆட்சியராக சாரு ஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன் செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குனராகவும், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும்,
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த மேகநாத ரெட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராகவும், சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயச்சந்திர பானு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக செயல் இயக்குநராகவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த குமரகுருபரன், தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையராக அழகு மீனா, திருப்பூர் ஆணையராக பவன் குமார், தூத்துக்குடி ஆணையராக தினேஷ் குமார், ஓசூர் ஆணையராக ஸ்நேகா, வேலூர் ஆணையராக ரத்தினசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: இட்லி பர்கர்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!