தமிழகத்தில் கன மழை : அதிகபட்ச மழை பதிவானது எங்கே?

தமிழகம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 2) தமிழகத்தில் 17 மாவட்டங்களில், கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 17 செ.மீ மழை பெய்துள்ளது.

பொன்னேரி – 16 செ.மீ., செங்குன்றம் 14.2 செ.மீ., கும்மிடிப்பூண்டி 13.6 செ.மீ., தாமரைப்பாக்கம் 8.8 செ.மீ., மழை பெய்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,180 கன அடியாக உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்வதால் செம்பரம்பாக்கம் ஏரி 75 சதவிகிதம் நிரம்பியுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 967 கன அடியில் இருந்து 1,997 கன அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 66 கன அடியில் இருந்து 214 கன அடியாகவும், கண்ணன்கோட்டை ஏரிக்கு வினாடிக்கு 70 கன அடியில் இருந்து 155 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

செல்வம்

ராமஜெயம் கொலை வழக்கு: நிர்மலா சீதாராமன் தலையீடு!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சம் கோடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *