தமிழகத்தில் டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ஆம் தேதி துவங்கியது. இந்தநிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் டிசம்பர் 7-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
இதன் காரணமாக வரும் டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்வம்
தலைநகர் யாருக்கு? டெல்லி மாநகராட்சி தேர்தலில் துவங்கிய ஓட்டுப்பதிவு!