தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இப்பொருட்கள் தனியாரிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் துவரம் பருப்பு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் லிட்டர் விலை ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155-க்கும், பாமாயில் ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,800 கோடி செலவாகிறது.
இந்தநிலையில், மக்களவை தேர்தல் காரணமாக பாமாயில் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மே மாதம் பாமாயில் வாங்காதவர்களுக்கு ஜூன் மாதமும், ஜூன் மாதம் வாங்காதவர்களுக்கு ஜூலை மாதமும் பாமாயில் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்களின் விலையை உயர்த்தலாமா என்று அரசு சார்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனைதொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு பருப்பு, பாமாயில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. அதன்படி 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 40 ஆயிரம் கிலோ துவரம் பருப்புகள் வாங்க நுகர்பொருள் வாணிப கழகத்தில் குறுகிய கால ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஸ்டாலின் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சி”: மின் கட்டண உயர்வு – அன்புமணி போராட்டம்!
“சாப்பாடு எப்படி இருக்கு?” அம்மா உணவகத்தில் ஸ்டாலின்