தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்பு தானம் பெற்று இதுவரை 10,003 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு உறுப்புதான திட்ட இயக்குநர் அமலோற்பவநாதன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,673 பேரிடம் இருந்து உறுப்பு தானம் பெற்று 10,003 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2008இல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுகுடல், கணையம் தானமாகப் பெறப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சில அரிதான நிகழ்வுகளில் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை, குஜராத், டெல்லியில் இருந்து இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு சென்னையில் சிகிச்சை மேற்கொண்டனர்.
இந்தியாவிலேயே 10,003 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு. மேலும் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று தமிழ்நாடு உறுப்பு தான திட்ட இயக்குநர் அமலோற்பவநாதன் தெரிவித்துள்ளார்.
ராஜ்
காலி குடங்களுடன் பெண்கள்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!