பரம்பொருள் மகா விஷ்ணு நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் சர்ச்சையான நிலையில், அரசு பள்ளிகளில் என்.ஜி.ஓ-க்கள் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த இன்று (செப்டம்பர் 6) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளையின் மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இதில், சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு நடத்தக்கூடாது என்று அங்கு பணியாற்றும் ஆசிரியர் சங்கர் தட்டிக்கேட்டார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று நேரில் சென்று ஆசிரியர் சங்கரை பாராட்டினார்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடன் காணொலி வாயிலாக இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தின்போது, “வெளிநபர்களை பள்ளிகளுக்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. அரசு சாராத பிற தனியார் என்.ஜி.ஓ-க்கள் மூலமாக அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது” என்று அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளிர் பள்ளிக்கு மகாவிஷ்ணுவை அழைத்து வந்தது எப்படி?
அன்று நடிகர் தாமு… இன்று மகா விஷ்ணு… மாணவர்களை அழ வைக்கும் மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்!