அஸ்ரா கார்க்…அமல்ராஜ்… : 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை ஆகியவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகளை அரசு பணியிட மாற்றம் செய்து வருகிறது.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 9) ஏடிஜிபி, ஐஜி அந்தஸ்த்துள்ள 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் ஆணையராக இருந்த அமல்ராஜ் சென்னை அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாகவும்,

சென்னை, மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் தாம்பரம் ஆணையராகவும்

சென்னை ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாகவும்,

மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் ஆயுதப்படை ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாகவும்,

நிர்வாக பிரிவு ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே, காவல்துறை தலைமையக ஏடிஜிபியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.

சைபர் கிரைம் விங் ஏடிஜிபி சங்சய் குமார், கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபியாகவும்,

கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபி சந்தீப் மிட்டல், சைபர் கிரைம் ஏடிஜிபியாகவும்,

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபி தமிழ் சந்திரன், தொழில்நுட்ப சேவை பிரிவு ஏடிஜிபியாகவும்,

சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேமானந்த சின்ஹா, தென் மண்டல ஐஜியாகவும்,

தென் மண்டல ஐஜி கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராகவும்,

சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், வடக்கு மண்டல ஐஜியாகவும்,

வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையராகவும்,

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு , சேலம் மாநகர காவல் ஆணையராகவும்,

சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி, ஆயுதப்படை ஐஜியாகவும்,

ஆயுதப்படை ஐஜி லட்சுமி திருப்பூர் மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

‘செல்வப்பெருந்தகை என்ன மகாத்மாவா’… ‘அரைகுறை அண்ணாமலை’… முற்றும் வார்த்தைப் போர்!

நெல்லை, கோவையை தொடர்ந்து காஞ்சி… மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்!

போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel