salary hike to tamilnadu part-time teachers
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 16,549 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தற்போது பணியில் இருப்பவர்கள் 10,359 ஆசிரியர்கள் ஆவார்கள்.
இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பலர் சென்னை, பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் போராட்டத்தில் நடத்தினார்.
அப்போது அவர்களைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச்சூழலில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
24.1.2024ஆம் தேதியிட்ட அந்த அரசாணையில், “தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் இவ்வாசிரியர்களுக்கு மாத ஊதியத்தினை 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை,தையல், தோட்டக்கலை உள்ளிட்ட பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். 2013-2014 ஆம் ஆண்டு வரை இவர்களது தொகுப்பூதியம் ரூ.5,000/- ஆக இருந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கான 2014-2015 ஆம் ஆண்டிற்கான திட்ட ஒப்புதல் குழுவில் இவர்களது தொகுப்பூதியம் 5,000/- லிருந்து 7,000/- ஆக உயர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 14.07.2017ல் இவர்களுக்குத் தொகுப்பூதியம் மாதம் ரூ.7,700/- என்றும், விடுப்பு மாதமான மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் ரூ.7,700/-லிருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
போக்குவரத்து மாற்றம் : ECR ரோட்டில் போக முடியாது!
காலம் கடந்து விஜயகாந்துக்கு விருது : பிரேமலதா
கிருஷ்ணகிரி தான் எனக்கு சொந்த ஊரு: முகமது ஜூபேர் பேட்டி!
முதலிடம் யாருக்கு?… தமிழ்நாடு-மகாராஷ்டிரா இடையே கடும் மோதல்!
salary hike to tamilnadu part-time teachers