சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் மாட்டுக்கறி உணவு வகைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் குற்றம் சாட்டிய நிலையில், தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த உணவு திருவிழாவில், 65 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் 35 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில், உணவு திருவிழாவில் மாட்டிறைச்சி உணவு எதையும் தயார் செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் குற்றம்சாட்டினர்.
இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக அரசு, “உணவு திருவிழாவில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரபலமான உணவுகள் ஸ்டால்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தின் உணவு அரங்கு எண் 17-ல் மாட்டிறைச்சி உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பீப் விற்பனை செய்யப்படும் காணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…