தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் புதிய தலைவராக நீரஜ் மிட்டல் நேற்று (நவம்பர் 13) நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் 2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் கலைஞரால் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்குவதற்காக துவங்கப்பட்டது.
அரசு கேபிள் டிவி நிறுவனமானது அரசு இ- சேவை மையங்களை நிறுவி மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தநிலையில், கடந்த மார்ச் 12-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் பதவி காலியாக இருந்தது. ஜூலை மாதம் 6-ஆம் தேதி தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவராக குறிஞ்சி சிவகுமார் நியமிக்கப்பட்டார்.
இவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் சங்க மாநில துணை தலைவராகவும், ஈரோடு மாவட்ட அரிமா சங்க தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்தநிலையில், குறிஞ்சி சிவக்குமாருக்கு பதிலாக தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவராக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப செயலாளர் பதவியுடன் கூடுதலாக தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் பொறுப்பையும் நீரஜ் மிட்டல் வகிப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செல்வம்
பற்றி எரிந்த அரசு பேருந்து : பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!