லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலி வாங்கிய சுனாமி ஆழி பேரலை ஏற்பட்ட 18-ஆம் ஆண்டின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 26) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2004-ஆம் ஆண்டு தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஆழி பேரலைகள் 30 மீட்டர் உயரத்திற்கு உருவாகி 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கியது.
சுனாமி தாக்கத்தினால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.
தமிழ்நாட்டில் சுனாமி பேரலை தாக்குதலால் 13 கடற்கரை மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 18 ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதில் ஆழி பேரலை ஏற்படுத்தி சென்ற தாக்கங்கள் ஆறாத ரணங்களாகவே உள்ளது.
சுனாமி 18-ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. சுனாமியால் இறந்தவர்களுக்கு கடற்கரையில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இன்று காலையில் கடலூர் மாவட்டத்தில் கடலில் பால் ஊற்றி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். நாகையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அஞ்சலி செலுத்தினார்.
செல்வம்
”கேங்ஸ்டா”: துணிவு 3வது சிங்கிள்!
அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?