தமிழ்நாட்டின் தனித்துவ இனிப்பு சந்திரகலா. இதில் வழக்கமான சந்திரகலா, நெய் சந்திரகலா, பாதாம் சந்திரகலா, டிரை ஃப்ரூட்ஸ் சந்திரகலா என ரகங்கள் உண்டு. இந்த ஸ்பெஷல் சந்திரகலாவை நீங்களும் வீட்டிலேயே செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
மைதா – அரை கிலோ
பால்கோவா – 300 கிராம்
முந்திரித்தூள் – 150 கிராம்
குங்குமப்பூ, ஏலக்காய்தூள் – தேவையான அளவு.
சாரைப் பருப்பு – 25 கிராம்
நெய் – 200 கிராம்
சர்க்கரைப்பாகு – அரை கிலோ
நெய் – ஒன்றரை கிலோ
எப்படிச் செய்வது?
கடாயில் மைதாவைப் போட்டு, உருக்கிய நெய் விட்டு தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாகப் ப¤டித்து அப்பளம் போல தட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சாரைபருப்பு, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பிசைந்து பால்கோவா மசாலாவைத் தயார் செய்துக் கொள்ளவும். தயார் நிலையில் உள்ள அப்பளத்தில் பால்கோவா மசாலாவை வைத்து, இருபுறமும் சேர்த்து முறுக்குப் பின்னல்போல சேர்த்து நன்றாக அழுத்தி முறுக்க¤ வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றி, இளஞ்சூட்டில் வைத்து, சந்திரகலாவைப் போட்டு, பொன¢நிறமாக சிவந்ததும் எடுக்கவும். ஒரு கடாயில் சீனிப் பாகைத் தாயர் செய்து, அதில் சந்திரகலாவை அழுத்தி வைத்து, சிறிது நேரம் கழித்து எடுத்து ஒரு தட்டில் அடுக்கவும். அதனமீது கொஞ்சம் நெய்யை ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். இப்போது சூடான ஸ்பெஷல் சந்திரகலா தயார்.
சண்டே ஸ்பெஷல்: வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி.. எது சிறந்தது?