கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைத்து சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
அண்மைக்காலமாக மின்சார தேவைக்கான தினசரி அளவு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. இதுவே இதுவரையிலான உச்சபட்ச மின்தேவை அளவாக உள்ளது.
இந்தநிலையில், வரும் கோடைகாலத்தில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கோடை காலத்தில் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் சிறப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள், ”கோடை காலத்தில் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். மேலும் இந்த ஆண்டு கோடையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உ ள்ளது.
இதனால் தினசரி மின்தேவை 20,744 மெகாவாட் அளவை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடையில் அதிக வெப்பம் காரணமாக மின்விநியோகம் செய்யப்படும் கேபிள்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவற்றில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இதனால் மின்வெட்டு குறைந்தழுத்த மின்விநியோகம் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இப்பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக துணைமின் நிலையங்கள் அருகில் உள்ள மின்மாற்றிகள் பராமரிக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்தப்படும்.
அதேபோல் தேவைப்படும் இடத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படும். குறிப்பாக குறைந்தழுத்த மின்விநியோகம் செய்யப்படும் இடங்களில் அப்பிரச்சனையைத் தீர்க்க கேபிள்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை மாற்றப்படும்,” என தெரிவித்தனர்.
-இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறார் ஆபாச பட வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
Thalapathy 69 ‘தடை அதை உடை’… விஜயை இயக்கப்போகும் ‘டாப்’ இயக்குநர்!