தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகளால் கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாட்டம் தடைப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் தேவாலயங்களுக்கு சென்று மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வந்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை சாந்தோமில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் ஆலயத்தில் இன்று அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி ஆராதனையானது ஆங்கில மொழியிலும், தமிழ் மொழியிலும் நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் பிரார்த்தனைக்காக மக்கள் வந்தனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
உலக புகழ்பெற்ற புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சேவியர் திடலில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் தத்ரூபமாக இயேசு கிறிஸ்து பிறப்பு அரங்கேற்ற நிகழ்வை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
திருப்பதி: சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி!