தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, இன்று (அக்டோபர் 26) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வரும் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்து குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். மறுபக்கம் பாதுகாப்பு நிறைந்த ஆளுநர் மாளிகை வாசல் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தசூழலில் அமைச்சரவை கூட்டம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது!
பெட்ரோல் குண்டு வீச்சு – நியாயமான விசாரணை இல்லை: ஆளுநர் மாளிகை!