தமிழ் மொழி வளர்ச்சி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Prakash

’தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை” என மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

மேலும் அவர் தன்னுடைய மனுவில், ’நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

tamil language promote case highcourt order

இந்த மனு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ’தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போதுமான அளவு நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்த வேண்டும்’ என தெரிவித்தனர். தமிழ் இலக்கியங்களை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

ஜெ.பிரகாஷ்

பாபர் அசாம் மிகப்பெரிய பூஜ்ஜியம்: பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

மா.செ. கூட்டம்: பன்னீருக்கு போட்டியாய் எடப்பாடியும் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel