உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், செம்மொழி என்ற தனிச்சிறப்பை பெற்றவை வெகுசில மொழிகளே. அந்தவகையில், இந்திய மொழிகளிலேயே முதன்முறையாக செம்மொழி என்ற தனிச்சிறப்பை தமிழ் மொழி பெற்ற நாள் இன்று.
கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி அப்போதைய குடியரசு தலைவரும் தமிழருமான அப்துல் கலாம் தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தார்.
தமிழ் மொழியின் சிறப்புகள்!
தமிழ் மொழியானது, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்த மக்களால் பேசப்படும் திராவிட மொழியாகும்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கை நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.
மலேசியாவில் ஆங்கிலம், மலாய், மாண்டரின் ஆகிய மொழிகளுடன் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது.
இந்தியாவில், தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்தபடியாக கேரளம், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தமிழ் இரண்டாம் நிலை மொழியாகவும், கர்நாடகா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் ஒன்றாகும்.
உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும்.
ஆதிச்சநல்லூரில் கி.மு 500 மற்றும் சமணமலையில் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழ் – பிராமி கல்வெட்டுக்களும் கண்டறியப்பட்டன.
தமிழ் மொழியானது சிறந்த பாரம்பரிய மரபுகள் மற்றும் இலக்கிய தரம் படைத்தவையாக உள்ளது.
தமிழ் இலக்கியங்கள் 2,000 ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.
கி.மு 300 – கிபி 300 தமிழ் சங்க இலக்கியத்தின் ஆரம்ப காலமாகும்.
மற்ற திராவிட மொழிகளை விட மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பாறைகள் மற்றும் கல்வெட்டுக்கள் கிமு 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…