11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மே 25) அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளை தமிழ் வழியிலும் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக முந்தைய திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளிலும், பின்னர் உறுப்பு கல்லூரிகளிலும் சிவில் மெக்கானிக்கல் உள்ளிட்ட தமிழ்வழி பாடப்பிரிவுகள் அமல்படுத்தப்பட்டன.
எனினும் பொறியியல் படிப்புகளை தமிழ்வழியில் படிப்பதற்கு மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
அதேபோல் 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கிலவழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 20ஆம் தேதி திறப்பு?
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!