தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் அறிஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான அண்ணா விருது உபயதுல்லாவுக்கும், காமராஜர் விருது ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும், பாரதியார் விருது முனைவர் வேங்கடாசலபதிக்கும், பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கும் திரு.வி.க விருது நாமக்கல் வேல்சாமிக்கும் வழங்கப்பட்டது.
அந்தவகையில் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான 74 விருதுகளுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ் அறிஞர்களின் பங்களிப்பை போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து பெருமை சேர்த்து வருகின்றது.
அந்தவகையில் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2௦23-ஆம் ஆண்டுக்கான 74 விருதுகளுக்கும் தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
அதன்படி திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, காமராஜர் விருது, அண்ணா விருது, இலக்கிய மாமணி விருது, தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா விருது,
கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுபுலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, மொழி பெயர்ப்பாளர் விருது, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது,
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, சி.பா.ஆதித்தனார் விருது, தமிழ்ச்செம்மல் விருதுகள் வழங்கப்படுகிறது.
விருது வழங்கும் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகையும் கேடயமும் வழங்கப்படுகிறது.
தமிழறிஞர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாகவோ அல்லது தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவே 15.10.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகிறோம். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.
கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 28190412, 044 26190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா?
ODI போட்டி: ரோகித் சர்மாவிடம் ஆலோசனை கேட்கும் சூர்யகுமார் யாதவ்