பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி வரை 30 முதல் 5௦ விழுக்காடு சிறப்புக் கழிவு விலையில் நூல் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இன்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகியப் பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அரிய நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு கழிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
நூல் விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். எழும்பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும்.
நூல்கள் பற்றிய விவரங்கள் அறிய www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இணைய வழியில் (Internet Banking) தொகை செலுத்தும் முறை
கணக்குத் தலைப்பு – International Institute of tamil Studies
கணக்கு எண் – 33068172999
IFSC குறியீடு எண் – SBI௦0133641
இவ்அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா