தொடர் விடுமுறையை அடுத்து, தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு நாளை (ஏப்ரல் 28) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு வழி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (வ.எண்.06051) நாளை (ஏப்ரல் 28) மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் செல்லும்,
மறுநாள் அதிகாலை 6.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். காலை 8.45 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை,
விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலில், 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயிலில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட 1.3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படும்.
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி டெல்லி பயணம்: அஜெண்டா என்ன?